×
Saravana Stores

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தோகைமலையில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை நிகழ்ச்சி

 

தோகைமலை, ஜூலை 19: தோகைமலையில் திருப்பதி திருமலை ஏழுமலையான் பாதயாத்திரை குழுவின் சார்பில் 30ம் ஆண்டு பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. தோகைமலையில் உள்ள திருப்பதி திருமலை ஏழுமலையான் பாதயாத்திரை குழுவின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோல் 30வது ஆண்டாக இந்த ஆண்டிற்கான பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பாதயாத்திரை குழு பக்தர்கள் ஏழுமலையானுக்கு மாலை அணிவித்து கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வந்தனர்.

பின்னர் நேற்று முன் தினம் தோகைமலை வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து பாதயாத்திரை புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதைமுன்னிட்டு தோகைமலை சக்தி விநாயகர், பகவதியம்மன், கருப்பசாமி மற்றும் வரதராஜபெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் தோகைமலை வரதராஜபெருமாள் கோயிலில் இருந்து பாதயாத்திரை குழு புறப்பாடு நடைபெற்றது. தோகைமலையில் இருந்து சுமார் 600 கிமீ பாதயாதிரையாக சென்று திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

The post மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தோகைமலையில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tirupati Tirumala Eyumalayan Temple ,Tokaimalai ,Thokaimalai ,Tirupati Tirumala Eyumalayan padayatra group ,Tirupati Tirumala Eyumalayan Padayatra ,
× RELATED திருப்பதி லட்டு விவகாரம் நெய்யின்...