×
Saravana Stores

குளம், குட்டைகளை தூர்வார குடிமராமத்து திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும்

 

பல்லடம், ஜூலை 19: தமிழ்நாட்டில் குளம், குட்டைகளை தூர்வார குடிமராமத்து திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும் என்று மதிமுக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் வடக்கு மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு செயலாளர் கிருஷ்ணன், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ஆடிட்டர் அன்பழகன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ரத்தினசாமி, மாநில நெசவாளர் செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புத்தரச்சல் மணி வரவேற்றார்.

மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜீன்ராஜ் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் ஆர் ஆர் ரவி, மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி, பல்லடம் நகர செயலாளர் வைகோ பாலு, பொங்கலூர் ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, அப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் விவசாயம், நீர் நிலைகளை பெருக்க குளம், குட்டைகளை தூர்வார குடிமராமத்து திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post குளம், குட்டைகளை தூர்வார குடிமராமத்து திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Madhyamik ,Kudimaramathu ,Tamil Nadu ,North District Madhyamik Executive Committee ,Pongalur ,Union Secretary ,Subramaniam ,
× RELATED பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்க கோரிக்கை