- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாவட்டம் தி.மு.க.
- திமுக
- ஜனாதிபதி
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- ஸ்டாலின்
- தமிழ்நாடு தினம்
- நீலகிரி மாவட்ட தி.மு.க
- தின மலர்
ஊட்டி, ஜூலை 19:திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஜூலை 18ம் தேதியன்று “தமிழ்நாடு நாள்” நிகழ்ச்சிகளை அனைத்து தரப்பினரும் விமர்சையாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முபாரக் ஆலோசனைப்படி மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட அமைப்பாளர்கள் எல்கில் ரவி, காந்தல் ரவி, ராஜா, செல்வராஜ், ரஹமத்துல்லா, ராமசந்திரன், கவுன்சிலர்கள் ரமேஷ், நகர துணை செயலாளர் ரீட்டா, நகர பொருளாளர் அணில்குமார், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், தம்பி இஸ்மாயில், மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகராஜ், கோபாலகிருஷ்ணன், ராஜ்குமார், தியாகு, மார்கெட் ரவி, உதகை வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் குண்டன், காளி, பாபுராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
The post மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.