- 2 பணிக்குழு
- நக்சலைட் கண்ணிவெடி
- சத்தீஸ்கர்
- பிஜப்பூர்
- பணிக்குழு
- நக்சலைட்டுகள்
- சுக்மா
- தண்டேவாடா
- சிறப்பு பணிக்குழு
- அதிரடிப்படை
- நக்சலைட்
- தின மலர்
பிஜாப்பூர்: சட்டீஸ்கரில் நக்சலைட்கள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி அதிரடிப்படை வீரர்கள் 2 பேர் பலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர். சட்டீஸ்கர் மாநிலம்,பிஜாப்பூர்,சுக்மா, தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, சிறப்பு அதிரடி படை(எஸ்டிஎப்) வீரர்கள், மாவட்ட ரிசர்வ் காவலர்கள், ஒன்றிய எல்லை பாதுகாப்பு படை மற்றும் கோப்ரா கமாண்டோ படையினர் நேற்று முன்தினம் வன பகுதியில் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேடுதல் பணியை முடித்து கொண்டு இரவு நேரத்தில் வீரர்கள் திரும்பி வந்தனர். டர்ரம் என்ற இடத்தில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்தது. இதில், அதிரடிப்படை வீரர்களான பரத் சாகு,சத்யேர் சிங் காங்கே ஆகியோர் பலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு கூடுதலாக படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதில் பலியான வீரர்களுக்கு மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய் இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் பதிவிடுகையில்,பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது. பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும்,படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
The post சட்டீஸ்கரில் பயங்கரம் நக்சலைட் கண்ணிவெடியில் சிக்கி அதிரடிப்படை வீரர்கள் 2 பேர் பலி: 4 பேர் காயம் appeared first on Dinakaran.