×
Saravana Stores

மோடிக்கு எதிராக வன்முறையை தூண்டும் கருத்துகளை காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பாஜ

புதுடெல்லி: பாஜ செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி நேற்று கூறுகையில்,குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக வன்முறையை தூண்டும் கருத்துகளை காங்கிரஸ் தலைவர்கள் வெளியிடுகின்றனர். காங்கிரசின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் வன்முறை மற்றும் கொலை போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது மோடியின் வாகனத்தின் மீது சில பொருட்கள் வீசப்பட்டதை வரவேற்கும் வகையில் அவர் பேசியுள்ளார். பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியில் மோடி சென்ற போது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. மோடியை பல துண்டுகளாக வெட்டுவேன் என்று முன்பு கூறியவர் தற்போது காங்கிரஸ் எம்பியாக உள்ளார்என குறிப்பிட்டார்.

 

The post மோடிக்கு எதிராக வன்முறையை தூண்டும் கருத்துகளை காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பாஜ appeared first on Dinakaran.

Tags : Congress ,Modi ,BJP ,New Delhi ,Suthansu Trivedi ,Senior ,Rahul Gandhi ,Parliament ,
× RELATED பாஜ பயங்கரவாதிகளின் கட்சி: பிரதமர் மோடிக்கு கார்கே பதிலடி