×

12வது படித்தவர்களுக்கு ரூ.6,000 , பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் : மராட்டிய அரசு அதிரடி

மும்பை : சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு 12வது படித்தவர்களுக்கு ரூ.6,000 மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என மராட்டிய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டியாவில் பாஜக கூட்டணி பின்னடைவை சந்தித்த நிலையில், நடப்பாண்டு இறுதியில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற அக்கூட்டணி கட்சியினர் பல்வேறு யூகங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகையை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6,000மும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.8000மும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 10,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு இளம் வாக்காளர்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் மாநிலத்தில் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதனால் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி மாநில அரசுக்கு செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 12வது படித்தவர்களுக்கு ரூ.6,000 , பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் : மராட்டிய அரசு அதிரடி appeared first on Dinakaran.

Tags : Maharashtra Government ,Mumbai ,Legislative Assembly elections ,BJP ,Maharashtra ,Dinakaran ,
× RELATED பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு...