×

ஒன்றிய அரசை கண்டித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் வரும் 24ம் தேதி ஆர்ப்பாட்டம்

 

தஞ்சாவூர், ஜூலை 18: குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்! ஒன்றிய அரசை கண்டித்து ஜீலை 24 தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூரில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக தொமுச அலுவலகத்தில் அனைத்து சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநில செயலாளர் தில்லைவனம், பொருளாளர் கோவிந்தராஜன், தொமுச மாவட்ட செயலாளர் சேவியர், நிர்வாகிகள் பாஸ்டின், ராஜேந்திரன், எட்வின்பாபு, ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ், மாவட்ட தலைவர் ரவி, ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் ராஜன், சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு, பொருளாளர் பேர்நீதிஆழ்வார் பங்கேற்றனர். கூட்டத்தில் 3 குற்றங்கள் சட்டங்களை திரும்ப பெறவவேண்டும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யவும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெறுவது என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியும் ஒன்றிய அரசை கண்டித்தும் வரும் ஜூலை 24 ம் தேதி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவவதாக முடிவு செய்யப்பட்டது.

The post ஒன்றிய அரசை கண்டித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் வரும் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Government Rapid Transport Corporation ,Union Government ,Thanjavur ,Jheel ,Thanjavur Government Rapid Transport Corporation ,Thomusa ,Dinakaran ,
× RELATED விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை...