×

கல்வி வளர்ச்சி நாள் விழா

 

தொண்டி, ஜூலை 18: தொண்டி,நம்புதாளை மற்றும் சுற்று வட்டார அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தொண்டி மேற்கு அரசு பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் சுபா வரவேற்றார். காமராஜரின் புகழ், சாதனைகள் குறித்து ஆசிரியர்கள் பேசினர். மாணவ,மாணவிகள் மாறு வேடமணிந்து வந்தனர். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

The post கல்வி வளர்ச்சி நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Education Development Day ,Thondi ,Thondi, Nambuthalai ,Kamaraj ,Educational Development Day ,Dondi West ,Government ,School ,Headmaster ,Shanti ,Education Development Day Ceremony ,Dinakaran ,
× RELATED வெடிமருந்து பறிமுதல் சம்பவம் தப்பியோடியவர்களை பிடிக்க தனிப்படை