×

மாநில வாலிபால் போட்டி

மதுரை, ஜூலை 18: மதுரையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. முதல் அரையிறுதி போட்டியில் சிஇஓஏ பள்ளி 25-14, 25-10 என்ற செட்களில் மதுரை விஎச்என் பள்ளியை வென்றது. அடுத்த அரையிறுதி போட்டியில் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு விடுதியைச் சேர்ந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளி மாணவர்கள் அணி 25-18, 25-17 என்ற செட்களில் சேதுபதி பள்ளியை வீழ்த்தியது. மூன்றாமிடத்திற்கான போட்டியில் சேதுபதி பள்ளி 25-16, 28-26 செட்களில் விஎச்என் பள்ளியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி பள்ளி 25-12, 25-22 செட்களில் சிஇஓஏ பள்ளியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ்நாடு முதுநிலை விளையாட்டு ஆணைய மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, பயிற்சியாளர் ஆனந்தபாபு, தாளாளர் ராஜா ஸ்டாலின், தலைமையாசிரியர் சாலமன் ராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் பிரேம் சாமுவேல் ராஜ், ஜெபஜான் ஆசீர், ஜஸ்டின் ஆகியோர் பாராட்டினர்.

The post மாநில வாலிபால் போட்டி appeared first on Dinakaran.

Tags : State Volleyball Tournament ,Madurai ,CEOA School ,Madurai VHN School ,Racecourse Sports Complex ,Dinakaran ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...