×

திண்டுக்கல்லில் மத நல்லிணக்க கந்தூரி விழா

திண்டுக்கல், ஜூலை 18: திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூரில் அசேன் உசேன் மக்கான் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மொகரம் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்க கந்தூரி விழா நடைபெறும். அந்த வகையில் 85ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று காலை தொழுகை மற்றும் பிரார்த்தனையுடன் நடைபெற்றது. இதில் அனைத்து சமூக மக்களும் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு பஞ்சா ஊர்வலம் நடந்தது. ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post திண்டுக்கல்லில் மத நல்லிணக்க கந்தூரி விழா appeared first on Dinakaran.

Tags : Religious Harmony Ganduri Festival ,Dindigul ,Asain Usain Makan ,Dindigul Round Road Puthur ,Mogaram festival ,Ganduri festival ,
× RELATED திண்டுக்கல்-கரூர் ரோடு...