×

சித்தூரில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 4 பேர் மீட்பு

பாலக்காடு: கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி உட்பட 4 பேர் ஆற்றில் மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் தண்ணீர் குறைவு காரணமாக மீன் பிடிப்பதற்கு சித்தூர் அருகேயுள்ள ஆலாங்கடவு பகுதியில் இறங்கியுள்ளனர். இவர்கள் இறங்கி மீன் பிடித்து கொண்டிருந்த போது தண்ணீரின் அளவு குறைவாகவே இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கேரளதமிழக எல்லையிலுள்ள மூலத்தரை தடுப்பு அணை பாதுகாப்பு கருதி மதகுகள் திறக்கப்பட்டது.

இதனால் மூலத்தரை மற்றும் சித்தூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு திடீரென ஏற்பட்டது. இதில் மூதாட்டி உட்பட 4 பேர் ஆற்றின் பாறையின் நடுவே சிக்கி கொண்டனர். இவற்றை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவலளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விரைந்த வந்த சித்தூர் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் 4 பேரையும் கயிறு கட்டி, லைப் ஜாக்கெட், பாதுகாப்பு கவசம் ஆகியவை வழங்கி மீட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு கேரள மின் துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி வந்து பார்வையிட்டு மீட்பு பணி குறித்து கேட்டறிந்தார்.

The post சித்தூரில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 4 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Palakkad ,Mysore, Karnataka ,Alangkadu ,Dinakaran ,
× RELATED மத்திய, மாநில விளையாட்டு அமைப்புகள்...