- கோல்ட் ரஷ்
- தெற்கு திருப்பதி
- மேட்டுப்பாளையம்
- தென்தி திருப்பதி ஸ்ரீவாரி கோவில்
- ஜடையம்பாளையம்
- சஹஸ்ர நாமார்ச்சன்
- தெற்கு திருப்பதி
மேட்டுப்பாளையம், ஜூலை 17: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஜடையம்பாளையத்தில் தென்திருப்பதி ஸ்ரீவாரி கோயிலில் ஆனி மாத புண்ணிய கால பூஜை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதனையொட்டி காலை முதல் சிறப்பு ஆராதனைகள், சகஸ்ர நாமார்ச்சனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து மாலை வேத மந்திரங்கள் முழங்க, கோவில் பட்டாச்சாரியார்களால் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்காரங்களும் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து திருவேங்கடசாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் தங்கத்தேரில் எழுந்தருளினார்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து இறுதியாக நிலையை வந்தடைந்தார். அப்போது, கோவிந்தா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கத்தேரினை வடம் பிடித்து இழுத்து பெருமானை வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சியில் அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் மற்றும் கேஜி தொழில் நிறுவனத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post தென்திருப்பதியில் தங்க தேரோட்டம் appeared first on Dinakaran.