×

லா பிளாக்னே செஸ், இனியனுக்கு வெண்கலம்

பாரிஸ்: பிரான்ஸின் லா பிளாக்னே நகரில் நடந்த லா- பிளாக்னே ஓபன் சர்வதேச செஸ் போட்டியில் (ஜூலை 6-12) இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த தொடரில் 17 கிராண்ட் மாஸ்டர்கள், 40 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட 17 நாடுகளை சார்ந்த 184 வீரர்கள் பங்கேற்றனர். 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில், இனியன் 6 வெற்றி, 2 டிரா 1 தோல்வி என 7 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பகிர்ந்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து, டை பிரேக்கர் கடைப்பிடிக்கப்பட்டதில் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். சக இந்திய கிராண்ட் மாஸ்டர் ராஜா ரித்விக் 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் ஜூல்ஸ் முஸ்ஸர்ட் (7.5) தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

 

The post லா பிளாக்னே செஸ், இனியனுக்கு வெண்கலம் appeared first on Dinakaran.

Tags : La Blancne Chess ,Inion ,PARIS ,India ,Grandmaster ,Inian Panneerselvam ,La-Blagnac Open International Chess Tournament ,La Blanca, France ,
× RELATED விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...