×
Saravana Stores

பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கவிதா மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் கவிதா(46) உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவை கடந்த மார்ச் 15ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதா உடல்நல குறைவு காரணமாக நேற்று காலை சிறையில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து கவிதா டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

The post பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கவிதா மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : P.R.S. Party ,Kavita ,New Delhi ,Bharatiya Rashtra Samithi Party ,Telangana ,Chief Minister ,K. Chandrasekhara Rao ,Kavitha ,Delhi ,
× RELATED நடிகர் விஜய் அரசியல் வருகை...