×

ராகுல் காந்தி வழக்கு தாமதிக்கப்படுகிறது: மும்பை ஐகோர்ட் கருத்து

மும்பை: மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக கடந்த 2014ம் ஆண்டு ஆர்எஸ்எஸைச் சேர்ந்த ராஜேஷ் குண்டே என்பவர் பிவாண்டியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து ராகுல் தொடர்ந்த வழக்கு மும்பை ஐகோர்டில் நீதிபதி பிருத்விராஜ் சவான் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தேவையில்லாமல் தாமதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஒரு வழக்கை விரைந்து விசாரிக்க கோருவது ஒருவரது உரிமை என்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையும் முற்றிலும் அவசியமான ஒன்று என்றும் நீதிபதி குறிப்பிட்டார். மேலும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய ராகுல்காந்தியின் மனுவுக்கு அனுமதி வழங்கிய நீதிபதி, 10 ஆண்டாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை விரைந்து முடிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

 

The post ராகுல் காந்தி வழக்கு தாமதிக்கப்படுகிறது: மும்பை ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Mumbai High Court ,Mumbai ,Rajesh Kunde ,RSS ,Bhiwandi Magistrate's Court ,Congress ,President ,Mahatma Gandhi ,Rahul ,Dinakaran ,
× RELATED எளிய மக்களுடன் ராகுல் காந்தி..!!