×

மயிலாடுதுறையில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் ரத்து

 

மயிலாடுதுறை, ஜூலை 16: மயிலாடுதுறையில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக நகராட்சி அறிவித்துள்ளது. மயிலாடுதுறை நகராட்சி குடிநீர் திட்டத்தின் கீழ் முடிகண்டநல்லூர் கொள்ளிடம் தலைமை குடிநீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது குடிநீர் பிரதான குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால் அதை சீரமைக்கும் நடைபெற உள்ளது. எனவே மயிலாடுதுறையில் இன்று (16ம் தேதி) மற்றும் நாளை (17ம் தேதி) குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.

The post மயிலாடுதுறையில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Mudikandanallur Kollid Head Drinking Water Station ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறையில் காவலர்களுக்கு லத்தி ட்ரில் கவாத்து பயிற்சி