×
Saravana Stores

செல்வபெருந்தகையை விமர்சித்த அண்ணாமலை ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

ஊட்டி, ஜூலை 16: காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகையை விமர்சித்த பாஜ தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊட்டி ஏடிசி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் ஊட்டி எம்எல்ஏ கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், மாநில எஸ்டி பிரிவு தலைவர் ப்ரியா நாஷ்மிகர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் ரகு சுப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் ஊட்டி ரவிக்குமார், வட்டார தலைவர்கள் கீழ்குந்தா ஆனந்த், கோத்தகிரி சில்லபாபு, குன்னூர் நகர தலைவர் ஆனந்த், பாலகொலாராமன், அதிகரட்டி பாலன், சுப்ரமணி, கவன்சிலர்கள், காந்தல் நாகராஜ், ராஜஸ்வரி பாபு, வின்சென்ட், மாவட்ட ஓபிசி தலைவர் ஜக்கநாரை ராஜூ, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், ஊடக பிரிவு தலைவர் மானேஷ்சந்திரன், மாணவர் காங்கிரஸ் தலைவர் பாரதிராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post செல்வபெருந்தகையை விமர்சித்த அண்ணாமலை ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress party ,Annamalai Ooty ,Selvaperunthakai ,Ooty ,BJP ,Annamalai ,Congress ,president ,Nilgiri District Congress ,Ooty ATC ,Annamalai Congress party ,
× RELATED மதுராந்தகம் நகர காங். தலைவர் தேர்வு