×

₹1.75 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், ஜூலை 16: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், மல்லசமுத்திரம் கிளையின் பாலமேடு உபகிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் விவசாயிகள் 65 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். இதில் சுரபி ரகம் குவிண்டால் ₹8085 முதல் ₹8156 வரையிலும், பிடி ரகம் ₹7035 முதல் ₹7399 வரையும் ஏலம் போனது. மொத்தம் ₹1.75 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. பாலமேட்டில் அடுத்த பருத்தி ஏலம் வரும் 22ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ₹1.75 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Palamedu ,Thiruchengode Agricultural Producers Cooperative Marketing Society ,
× RELATED ₹3.50 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்