×

கோட்டார் கவிமணி பள்ளியில் வகுப்பறை கட்டுமான பணியை பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு

நாகர்கோவில், ஜூலை 16: கோட்டாரில் கவிமணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பு அறைகள் கொண்ட ஒரு கட்டிடம் சேதமானதையொட்டி, அதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக நபார்டு திட்டத்தின் கீழ் ₹85 லட்சம் செலவில் 4 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டுமானப்பணி தொடங்கியது. கட்டுமானப்பணி வேகமாக நடந்து வருகிறது. கட்டிடத்தின் மேற்கூரை காங்கிரீட் போடும் பணி நடக்க இருக்கிறது. இந்நிலையில் நேற்று பொதுப்பணித்துறை கட்டுமானப்பிரிவு செயற்பொறியாளர் அனிதாசாந்தி கட்டுமானப்பணியை ஆய்வு செய்தார். மேலும் கட்டுமானப்பணியின் போது போடப்பட்டுள்ள கம்பிகள் ஒப்பந்தத்தின்படி போடப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறை கட்டுமானப்பணி இன்னும் 2 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செயற்பொறியாளருடன், ஒப்பந்தகாரர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

The post கோட்டார் கவிமணி பள்ளியில் வகுப்பறை கட்டுமான பணியை பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kavimani School ,Kottar ,Nagercoil ,Kavimani Girls High School ,
× RELATED கோட்டார் அரசு மருத்துவ கல்லூரியில் கலெக்டர் ஆய்வு