×

கலைஞர் பிறந்தநாள் விழா இறகுப்பந்து போட்டி

திருப்பரங்குன்றம், ஜூலை 16: திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் பிறந்த நாள் விழா இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் உத்தரவின் பேரில் கலைஞர் பிறந்த நாள் இறகுப்பந்து போட்டி திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டி, வட்ட செயலாளர் எம்ஆர்பி ஆறுமுகம், கருவேலம்பட்டி வெற்றி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் பிறந்தநாள் விழா இறகுப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Tags : Artist Birthday Party Volleyball Tournament ,Thiruparangunram ,DMK Youth ,Madurai South District DMK Youth ,District Secretary ,Sedapatti Manimaran ,Artist ,Celebration Volleyball Tournament ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் லட்சுமி...