×

சில்லி பாயின்ட்

* விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் முடிவடைந்ததை அடுத்து நேற்று வெளியான ஏடிபி தரவரிசைப் பட்டியலில், முதலிடத்தில் உள்ள யானிக் சின்னர் (இத்தாலி) விம்பிள்டனில் காலிறுதியுடன் வெளியேறியதால் 320 புள்ளிகளை இழந்தாலும் நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துள்ளார். ஜோகோவிச் (செர்பியா), சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் (ஸ்பெயின்) முறையே 2, 3வது இடங்களில் உள்ளனர்.
* மகளிருக்கான டபுள்யூடிஏ தரவரிசையில் இகா ஸ்வியாடெக் (போலந்து) முதல் இடத்தில் நீடிக்கிறார். விம்பிள்டன் சாம்பியன் பார்போரா கிரெஜ்சிகோவா 22 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளார். ஜாஸ்மின் பாலினி (இத்தாலி) 2 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 5வது இடதில் உள்ளார்.
* ஈரோடு மாவட்டம் திண்டலில் நடந்த மாநில அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), கேரளா காவல்துறை, வருமான வரித்துறை உட்பட முன்னணி அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடந்த போட்டியில் எல்லா அணிகளையும் வீழ்த்தி முதலிடம் பிடித்த ஐஓபி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
* சென்னையில் கல்லூரிகளுக்கு இடையிலான 27வது ராகவேந்திரா கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி நடந்தது. அதன் பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி 71-33 என்ற புள்ளிக் கணக்கில் வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
* யூரோ கோப்பை கால்பந்து தொடர் முடிவடைந்த நிலையில், ஜெர்மனி அணி நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் (33 வயது) சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010ல் ஜெர்மனி அணியில் அறிமுகமான முல்லர் 131 போட்டியில் விளையாடி 45 கோல் போட்டுள்ளார். 2014ல் ஜெர்மனி உலக கோப்பையை வென்றதில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
* கோபா அமெரிக்கா கோப்பை வெற்றியுடன் அர்ஜென்டினா நட்சத்திரம் ஏஞ்சல் டி மரியா (36 வயது) சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து விடைபெற்றுள்ளார்.

The post சில்லி பாயின்ட் appeared first on Dinakaran.

Tags : Silly ,Yannick Sinner ,Italy ,Wimbledon ,ATP ,Wimbledon Grand Slam ,Djokovic ,Serbia ,Silly Point ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்