×
Saravana Stores

பஞ்சாப் அரசு பள்ளிகளில் புத்தக பை இல்லாத தினம் அறிமுகம்

சண்டிகர்: பஞ்சாப்பில் அரசு பள்ளிகளில் புத்தக பை இல்லாத தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாதந்தோறும் புத்தக பை இல்லாத தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாதந்தோறும் கடைசி சனிக்கிழமையன்று மாணவர்கள் புத்தக பை இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டும். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஷிவ்பால்,‘‘மாதந்தோறும் ஒரு நாள் புத்தக பை இல்லா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த நாளில் வழக்கமான பாடங்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு விளையாட்டு, கதை சொல்லுதல், விவாதங்கள் மற்றும் யோகா ஆகியவை நடத்தப்படும் என்றார். கல்வி அதிகாரிகள் கூறுகையில், இந்த முயற்சியானது மன அழுத்தமில்லாத கற்றல் அனுபவத்தை வழங்குதல்,படைப்பாற்றல் திறனை வளர்ப்பது,மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது என்றனர்.

The post பஞ்சாப் அரசு பள்ளிகளில் புத்தக பை இல்லாத தினம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Book Bag Free Day ,Punjab ,Government ,Chandigarh ,Basilka district of Punjab ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் எல்லையில் இந்த ஆண்டு மட்டும் 200 டிரோன்கள் பறிமுதல்..!!