×
Saravana Stores

அமைச்சர் உதயநிதி தலைமையில் சந்தித்த முதல் தேர்தலில் திமுக அபார வெற்றி

 

விழுப்புரம், ஜூலை 14: தமிழகத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சந்தித்த முதல் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பலம் வாய்ந்த கட்சியாக திமுக மாறி வருகிறது. இதுவரை திமுக சந்தித்த தேர்தலில் அக்கட்சி தலைவர்கள் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்வது வழக்கம். பேரறிஞர் அண்ணா காலம் முதல், கருணாநிதி என தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி திமுக தலைவராக பொறுப்பேற்றது முதல்வரான மு.க.ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தலிலும் நேரில் பிரசாரம் மேற்கொண்டு தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக இளைஞர் அணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை திமுக சந்தித்தது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து பல்வேறு வெற்றி வியூகங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வகுத்துக் கொடுத்திருந்தார். மேலும் தேர்தல் கடைசி 7, 8ம் தேதி ஆகிய 2 நாட்களில் தொகுதி முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திமுக அரசின் 3 ஆண்டு சாதனை திட்டங்களான கலைஞர் மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட அடுக்கடுக்கான சாதனை திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார்.

மேலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு 3 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகளையும் செய்ய உள்ள திட்டங்களையும் எடுத்துரைத்து மக்களிடையே வாக்கு சேகரித்தார். அமைச்சர் உதயநிதியின் பிரசாரம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.  இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சந்தித்த இடைத்தேர்தலில் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் உதயநிதி தலைமையில் சந்தித்த முதல் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

The post அமைச்சர் உதயநிதி தலைமையில் சந்தித்த முதல் தேர்தலில் திமுக அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Minister ,Udayanidhi ,Viluppuram ,Tamil Nadu ,Udayaniti Stalin ,India ,Abhara ,
× RELATED சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரத்தில்...