×

சித்தோடு மார்க்கெட்டிற்கு வெல்லம் வரத்து அதிகரிப்பு

 

ஈரோடு, ஜூலை 14: ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏலம் மூலம் வெல்ல மூட்டைகள் (30 கிலோ) விற்பனை செய்யப்படும். இதன்படி, இந்த வாரம் மார்க்கெட்டில் நாட்டு சர்க்கரை 2,600 மூட்டையும், உருண்டை வெல்லம் 3,200 மூட்டையும், அச்சு வெல்லம் 450 மூட்டையும் வரத்தானது.

இதில், நாட்டுச்சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,270 முதல் ரூ.1,360 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,310 முதல் ரூ.1,400 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,340 முதல் ரூ.1,410 வரை என்ற விலையில் விற்பனையானது. கடந்த வாரத்தை விட வெல்லம் வரத்து சற்று அதிகரித்த போதிலும், கடந்த வார விலையிலேயே வெல்லங்கள் விற்பனையானதாக மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post சித்தோடு மார்க்கெட்டிற்கு வெல்லம் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chithod Market ,Erode ,Chithod Vela Market ,
× RELATED ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள தனியார்...