×

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலின் செல்போன் உளவுமென்பொருள் மூலம் குறிவைப்பு: ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து வந்த தகவலை வௌியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களின் ஐபோன்கள் உளவு மென்பொருள்கள் மூலம் குறி வைக்கப்படுவதாகவும், அரசியல் சட்டங்களுக்கு எதிரான பிரதமர் மோடி அரசின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்போம் என காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார். இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் டிவிட்டரில் பதிவிடுகையில், ‘அரசியல் சட்டத்துக்கு எதிரான மற்றும் பாஜவின் பாசிச நடவடிக்கைகளை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பது மக்களவை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.

ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அரசியல் எதிரிகளை குறி வைத்து அவர்களுடைய தனியுரிமைகளை மீறும் வகையில் நடந்து கொள்கிறது. உங்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய ஐபோனை தொலை துாரத்தில் சமரசம் செய்ய முயற்சிக்கும் கூலிப்படையின் உளவு மென் பொருள் மூலம் தாக்குதலுக்கு குறி வைக்கப்படுகிறீர்கள் என்று ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எச்சரிக்கை தகவல் வந்துள்ளது.

என்னுடைய ஐ போனுக்கு தீங்கிழைக்கும் உளவு மென்பொருளை அனுப்பியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. இந்த அப்பட்டமான அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான செயல்கள் மற்றும் ஒருவரின் தனியுரிமைகளை மீறும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்போம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலின் செல்போன் உளவுமென்பொருள் மூலம் குறிவைப்பு: ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து வந்த தகவலை வௌியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,General Secretary ,KC Venugopal ,Apple ,New Delhi ,Modi government ,Venugopal ,K.C. Venugopal ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!