×

அடுத்தடுத்து நுழைந்த பாம்புகள் திருவாடானை அருகே பரபரப்பு

 

திருவாடானை, ஜூலை 13: திருவாடானை அருகே, ஊராட்சி அலுவலகத்தில் அடுத்தடுத்து நுழைந்த கருநாகப் பாம்புகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த ஊராட்சி செயலர் அலறியடித்து வெளியே ஓடினார். திருவாடானை அருகே, முகிழ்தகம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த அலுவலகத்தில் ஊராட்சி செயலர் வழக்கமாக பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுமார் 5 அடி நீளமுள்ள 3 கருநாகப் பாம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே நுழைந்தன.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊராட்சி செயலர் அலறியடித்து வெளியே ஓடி வந்தார். பின்னர் இது குறித்து உடனடியாக திருவாடானை தீயணைப்புத்துறையினருக்கு ஊராட்சி செயலர் தகவல் அளித்துள்ளார். இதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், ஊராட்சி அலுவலகம் வந்து சுமார் 5 அடி நீளமுள்ள கொடிய விஷத்தன்மை கொண்ட 3 கருநாகப் பாம்புகளை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர். ஊராட்சி அலுவலகத்தில் அடுத்தடுத்து பாம்புகள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post அடுத்தடுத்து நுழைந்த பாம்புகள் திருவாடானை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvadan ,Thiruvadanai ,Panchayat ,Panchayat Council ,Mukhilthagam village ,
× RELATED திருவாடானை பகுதியில் நீர்நிலை சீரமைப்பு