×

சேரன்மகாதேவி அருகே பொன் பெருமாள் சாஸ்தா கோயில் வருஷாபிஷேகம்

வீரவநல்லூர்,ஜூலை 13: சேரன்மகாதேவியை அருகே பூதத்தான்குடியிருப்பு பொன் பெருமாள் சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் மற்றும் கும்ப பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு கோபுர விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடந்தது. பின்னர் சாஸ்தாவிற்கு சங்காபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

The post சேரன்மகாதேவி அருகே பொன் பெருமாள் சாஸ்தா கோயில் வருஷாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Pon Perumal Shasta Temple Varushabhishekam ,Cheranmahadevi ,Veeravanallur ,Varushabhisheka ,Pon Perumal Shasta Temple ,Varushabhishegam ,
× RELATED சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல்...