×

பொது மேடைகளில் தொடர்ந்து தடுமாறும் அமெரிக்க அதிபர் பைடன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என குறிப்பிட்டதால் பரபரப்பு

வாஷிங்டன்: நரம்பியல் பிரச்சனைகளால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து தடுமாறி வாரும் நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, புதின் என்று தவறாக குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெலன்ஸ்கியை வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்னர் ஜெலன்ஸ்கியை பேச அழைத்த பைடன் அவரது பெயரை அதிபர் புதின் என்று தவறாக குறிப்பிட்டதால் சலசலப்பு எழுந்தது.

பின்னர் சுதாகரித்து கொண்ட பைடன், புதினை விரைவில் வீழ்த்த இருக்கும் ஜெலன்ஸ்கியை பேச அழைப்பதாக கூறி சமாளித்தார். இதனிடையே மற்றொரு செய்தியாளர் சந்திப்பின் போது துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்பதற்கு பதிலாக டிரம்ப் என்றும் தவறுதலாக ஜோ பைடன் குறிப்பிட்டார். நரம்பியல் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பொது மேடைகளில் தடுமாறி வரும் ஜோ பைடன், கடந்த மாத இறுதியில் டிரம்ப் உடனான நேரடி விவாதத்தின் போது தொடர்பில்லாமல் பேசியதும், பேச தடுமாறியதும் பெரும் விமர்சனத்து உள்ளாகியுள்ளது.

The post பொது மேடைகளில் தொடர்ந்து தடுமாறும் அமெரிக்க அதிபர் பைடன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என குறிப்பிட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : CHANCELLOR ,BIDEN ,PRESIDENT ,ZELANSKY ,Washington ,U.S. President ,Joe Biden ,Zelensky ,U.S. President Joe Biden ,NATO ,Vladimir ,US ,President Biden ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புதிய புகார்..!!