- சிஐடியு
- யூனியன் ஊராட்சி
- நாகப்பட்டினம்
- பனங்குடி சிபிசிஎல்
- யூனியன் அரசு
- சிவனருட்செல்வன்
- சிபிசிஎல்
- பாலசுப்ரமணியன்
- தின மலர்
நாகப்பட்டினம்,ஜூலை12: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசை கண்டித்து சிஐடியூ சார்பில் நாகப்பட்டினம் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவனருட்செல்வன் தலைமை வகித்தார். சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர்கள் பாலசுப்பிரமணியன், குமரவேல், செயலாளர்கள் கண்ணன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ நாகை மாலி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்ட செயலாளர் தங்கமணி, பொருளாளர் வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.