×

தேனியில் இன்று பெரியகுளம் சாலையில் மரங்களை வெட்டி அகற்றும் பணி ஏலம்

 

தேனி, ஜூலை 12: தேனி நகரில் நேரு சிலையில் இருந்து அன்னஞ்சி விலக்கு வரை உள்ள சாலையானது தேசிய நெடுஞ்சாலை துறையால் கைவிடப்பட்டு, மாநில நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இச்சாலையில் தேனி போலீஸ் நிலையத்திலிருந்து பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள சாலை பிள்ளையார் கோயில் வரை சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறாக 23 மரங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இம்மரங்களை அப்புறப்படுத்த தேனி மாவட்ட பசுமை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் இன்று காலை 10.30மணி அளவில் நேரடி ஏலம் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தலைமையில் நடத்தப்பட உள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கோட்ட பொறியாளர், மாநில நெடுஞ்சாலை துறை, தேனி என்ற பெயரில் ரூ.30 ஆயிரத்திற்கு வரைவோலை எடுத்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை தேனி உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

The post தேனியில் இன்று பெரியகுளம் சாலையில் மரங்களை வெட்டி அகற்றும் பணி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Periyakulam road ,Theni ,Nehru Statue ,Annanji Exclusion ,National Highways Department ,State Highways Department ,Pomayagaoundanpatti ,Dinakaran ,
× RELATED தேனியில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு