×

புதிய ரேசன் கடை திறப்பு

 

பரமக்குடி,ஜூலை 12: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் கொட்டகுடி கிராமத்தில், வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என கொட்டகுடி கிராமமக்கள் எம்எல்ஏ முருகேசனிடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2022-2023 கீழ் ரூ.8லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.

இதனை எம்எல்ஏ முருகேசன் திறந்து திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்களை வழங்கினார். இந்நிகழ்வில், நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு. விற்பனையாளர் பாண்டி, நயினார்கோவில் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி, ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணைச் செயலாளர் கோவிந்தன் மற்றும் புலிகேசவன், கிளை செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post புதிய ரேசன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Kottakudi ,Nayanarkoil ,Paramakkudi ,Kottagudi ,MLA Murugesan ,Paramakkudy Assembly ,Dinakaran ,
× RELATED எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு