×

அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் முதலிடம்

தர்மபுரி, ஜூலை 12: ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தர்மபுரி சார்பில்,மாவட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டிகள், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடந்தது. இதில் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பெற்று, மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இப்போட்டியில் பேகராஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி 2ம் இடம் பிடித்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளை, ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தர்மபுரியின் செயலாளர் குமார், ரங்காதன், முனியப்பன் மற்றும் நடுவர்கள் பாராட்டினர்.

The post அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Government Boys School ,Dharmapuri ,Hockey Unit of Tamil Nadu ,Hockey Unit ,Government Boys High School ,Palakod ,Balakot Government Boys High School ,Dinakaran ,
× RELATED ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட...