×

பயோனியர் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

நாகர்கோவில், ஜூலை 12: தி பயோனியர் பள்ளி மற்றும் கேப் செஸ் அகாடமியும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நாகர்கோவில் தி பயோனியர் பள்ளியில் நாளை (13ம் தேதி) நடக்கிறது. அன்று காலை 9.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது. போட்டி பொதுப்பிரிவு மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கு 7, 9, 11, 13 மற்றும் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவுகளில் நடக்கிறது. போட்டியில் பங்கேற்க விருப்பமுடைய மாணவ, மாணவிகள் கேப் செஸ் அகாடமியில் நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவு செய்யலாம். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பொதுப்பிரிவில் 10 ரொக்க பரிசுகளும், சிறுவர், சிறுமியர் பிரிவில் மொத்தம் 100 கோப்பைகளும் மற்றும் அதிகமாக பங்கேற்கும் இரண்டு பள்ளிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகிறது. போட்டி ஏற்பாடுகளை பயோனியர் பள்ளி தாளாளர் லதா குமாரசுவாமி, பள்ளி முதல்வர் மற்றும் கேப் ெசஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் சிவா ஆகியோர் செய்து வருகின்றனர்.

The post பயோனியர் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி appeared first on Dinakaran.

Tags : Pioneer ,School ,Nagercoil ,The Pioneer School ,Cape Chess Academy ,Pioneer School District Level Chess Tournament ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் 163 மாணவர்களுக்கு ரூ.6.32 கோடி கல்வி கடன்: எம்பி வழங்கினார்