×
Saravana Stores

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சகோதரர் மறைவுக்கு வைகோ இரங்கல்

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சகோதரர் மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும் , எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் சகோதரர் கே.இராதாகிருஷ்ணன் (வயது 66) அவர்கள் நேற்று (09.07.2024) உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

ஜனநாயக மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் சகோதரி கே.மல்லிகா அவர்களின் சகோதரரான கே.இராதாகிருஷ்ணன் அவர்கள் சிதம்பரம் அண்ணாமலை நகர் திடல் வெளிப்பகுதியில் தனியார் தொழிலகம் நடத்தி வந்தார்.கே.இராதாகிருஷ்ணன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், சகோதரரை பிரிந்து துயரில் வாடும் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், மறைந்த இராதாகிருஷ்ணன் அவர்களின் துணைவியார் சங்கவி அவர்களுக்கும், சங்கீதா, சற்குணா, கனிமொழி ஆகிய அவரின் மகள்களுக்கும் ஆறுதலையும் மறுமலர்ச்சி தி.மு. கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சகோதரர் மறைவுக்கு வைகோ இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Secretary of State ,Marxist Communist Party ,K. ,Brother ,Balakrishnan ,Chennai ,K. VAIKO ,BROTHER BALAKRISHNAN ,Secretary General ,M. B. ,Yuma Wiko ,Communist Party of India ,Marxist ,K. Balakrishnan ,K. Wiko ,Dinakaran ,
× RELATED பாஜ கூட்டணியில் இருந்தபோது...