×

செம்மொழிக்கான அளவுகோல்களில் மாற்றம் மராத்தியை செம்மொழியாக அங்கீகரிப்பதை தடுக்க ஒன்றிய அரசு முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தன் டிவிட்டர் பதிவில், “மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன. மராத்தி மொழியை செம்மொழியாக அறிவிக்க காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. உயிரியல் அல்லாத பிரதமரின் ஆட்சியில் பூஜ்ஜிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்பட்டுள்ளது. செம்மொழி தகுதிக்கான அளவுகோலை அரசாங்கம் தற்போது மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய மகாராஷ்ரா அரசு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுமா? மக்களவை தேர்தலில் தோல்வியை தந்த மகாராஷ்டிரா மக்களை பழி வாங்கும் முயற்சியா இது? மராத்தியை செம்மொழியாக அங்கீகரிப்பதை தடுக்கும் முயற்சியா?” என பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post செம்மொழிக்கான அளவுகோல்களில் மாற்றம் மராத்தியை செம்மொழியாக அங்கீகரிப்பதை தடுக்க ஒன்றிய அரசு முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Congress ,New Delhi ,general secretary ,Jairam Ramesh ,Manmohan Singh ,
× RELATED ஒன்றிய அரசின் அனுமதியின்றி தேசிய...