×

3 புதிய சட்டங்களையும் குப்பையில் வீசும் வரை வழக்கறிஞர்கள் போராட்டம் தொடரும்: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேச்சு

சென்னை: மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 3 புதிய சட்டங்களை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் உயர் நீதிமன்றம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எம்.ஜவாஹிருல்லா பேசினார். அவர் பேசும்போது, பழைய 3 குற்றவியல் சட்டங்களை அப்படியே காபி அண்ட் பேஸ்ட் என்று சொல்வார்கள் அதைத்தான் இவர்கள் செய்து இருக்கிறார்கள். இந்த சட்டத்தில் அப்பட்டமான மனித உரிமை மீறல் இருகிறது. எடுத்துக்காட்டாக, காவல் நிலைய மரணம் நடைபெற்றால் பழைய சட்டப்படி மாவட்ட நீதிபதி விசாரித்து அறிக்கை தர வேண்டும் என்று சொல்கிறது.

ஆனால் புதிய சட்டத்தில் மாவட்ட நீதிபதிக்கு பதிலாக ஒரு ஆர்.டி.ஓ அல்லது டி.ஆர்.ஓ இதை விசாரிப்பார் என்று சொல்கிறது. இது நிச்சயம் மக்கள் சார்புள்ளதாக இருக்காது. மேலும் குற்றச்சாட்டப்பட்டவரை கைவிலங்கு போடக்கூடிய அந்த பழைய காட்டுமிராண்டி முறையை புதிய சட்டம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. எனவே, இந்த மூன்று சட்டங்களும் குப்பைத் தொட்டியில் வீசப்படும் வரையில் போராட்டம் ஒற்றுமையோடு தொடரும் என்றார். இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.முஜிபுர் ரஹ்மான், தலைமை நிலைய செயலாளர் எம்.ஜெயினுல் ஆபிதீன், வழக்கறிஞர் சைத் அபுதாஹிர் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

The post 3 புதிய சட்டங்களையும் குப்பையில் வீசும் வரை வழக்கறிஞர்கள் போராட்டம் தொடரும்: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Humanity People's Party ,CHENNAI ,MM Jawahirullah ,
× RELATED ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜவுக்கு மக்கள் கொடுத்த பதிலடி