×

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் சாலைகளில் நிலச்சரிவு: நெடுஞ்சாலைகளில் இரண்டாவது நாளாக முடங்கிய போக்குவரத்து

இமாச்சலப் பிரதேசம்: வட மாநிலங்களில் தொடர் கனமழை மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை இடையே மண்டி, சிம்லா பகுதிகளில் முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைகள் மூடப்பட்டுள்ளன. உத்தரகாண்டில் பத்ரிநாத் செல்லும் பாதை உட்பட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அசாமில் 30 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை மற்றும் வெள்ளத்திற்கு மேலும் ஆறு பேர் பலியான நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. பலரும் உணவு குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி கிடைப்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சரயு ஆற்றில் 2 புறங்களிலும் கரைகளை தொட்டவாறு வெள்ளம் பாய்ந்தோடுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பீகாரில் மழை பெய்வதால் கண்டாகி நதி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது .

இதனால் கரையோர பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் மக்கள் அன்றாட தேவைக்கு கூட படகு மூலம் சென்று வரும் நிலை உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கனமழை தொடர்ந்த நிலையில் சாலைகளை மூழ்கடித்து தண்ணீர் பந்தோடியது. கர்நாடகாவில் உடுப்பி, தட்சிணகன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்கள் கனமழையால் தத்தளிக்கின்றன இப்பகுதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மங்களூரு உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை நீடிக்கும் நிலையில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் சாலைகளில் நிலச்சரிவு: நெடுஞ்சாலைகளில் இரண்டாவது நாளாக முடங்கிய போக்குவரத்து appeared first on Dinakaran.

Tags : Himachal Pradesh ,Uttarakhand ,Mandi ,Shimla ,Uttarakhand… ,Dinakaran ,
× RELATED விவசாயிகள் போராட்டத்தில் கொலை,...