ஹத்ராஸ்: போலே பாபா ஆன்மிக கூட்டத்தில் உயிரிழப்புகள் நடந்ததற்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களே காரணம் என உ.பி. அரசின் விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையில் மக்களை அழைத்தது, போதிய ஏற்பாடுகளை செய்யாதது, கூட்டம் நடக்கும் இடத்தை சரியாக ஆய்வு செய்யாதது என எல்லாவற்றுக்கும் ஏற்பாட்டாளர்களே காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த சத்சங்கத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஜூலை 2-ம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் சுமார் 300 பக்க அறிக்கையை விசாரணை குழு இன்று சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், சத்சங்கத்திற்கு அதிகாரிகள் சுமார் 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி கேட்டிருந்ததாகவும், அதேசமயம் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 119 பேரின் வாக்குமூலங்கள் இடம் பெற்றுள்ளது. அதில் ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட், ஆஷிஷ் குமார், போலீஸ் சூப்பிரண்டு, நிபுன் அகர்வால், சப் டிவிஷன் மாஜிஸ்திரேட், நெரிசல் ஏற்பட்ட ஜூலை 2 அன்று பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், ஹத்ராஸ் கொடூரத்தால் பாதிக்கப்பவர்களின் குடும்பத்தினரின் வாக்கு மூலங்களும் இந்த அறிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
The post போலே பாபாவின் ஆன்மிக கூட்டத்தில் நடந்த உயிரிழப்புகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம்: விசாரணை குழுவின் அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.