×
Saravana Stores

என்னை தோற்கடிக்க சதி செய்த எடப்பாடி பழனிசாமிக்கு, ராமநாதபுரத்தில் டெபாசிட் பறிபோனதுதான் மிச்சம்: ஓ.பன்னிர்செல்வம் பேட்டி

மதுரை: என்னை தோற்கடிக்க சதி செய்த எடப்பாடி பழனிசாமிக்கு, ராமநாதபுரத்தில் டெபாசிட் பறிபோனதுதான் மிச்சம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது ஜெயந்தி விழாவும் 62வது குருபூஜை விழாவும் அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் கடந்த 28-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 30ம் தேதி பசும்பொன்னில் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க.ஸ்டாலின் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

அதேபோல் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தமிழக மக்களை பொறுத்த வரையில் கழகம் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்து கொள்கிறேன். ராமநாதபுரத்தில் என்னை தோற்கடிக்க 6 பன்னீர் செல்வத்தை நிறுத்தினார்கள். அதன் முடிவு டெபாசிட் இழந்தார்கள். ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். விஜய் மாநாடு நடத்தியவுடன் வாழ்த்து தெரிவித்தேன், விஜய் செயல்பாடு குறித்து பின்னர் கருத்து தெரிவிக்கிறேன்” என்றார்.

The post என்னை தோற்கடிக்க சதி செய்த எடப்பாடி பழனிசாமிக்கு, ராமநாதபுரத்தில் டெபாசிட் பறிபோனதுதான் மிச்சம்: ஓ.பன்னிர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Ramanathapuram ,Madurai ,Eadapadi Palanisami ,Chief Minister ,O. Paneer Selvam ,Ramanathapuram district ,117th Jayanti Festival ,62nd Gurupuja Festival of Basumbon Muthuramalingad Devi ,Edapadi Palanisami ,
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி..!!