×

இன்று மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு கல்லூரி முதல்வர் தகவல் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில்

செய்யாறு, ஜூலை 9: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் ந.கலைவாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் ந.கலைவாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2024-2025ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை(யூஜி) மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சிறப்பு பிரிவினர் மற்றும் பொது கலந்ததற்கான செயற்கை அனைத்தும் முடிவுற்றது. இதுவரை கலந்தாய்வில் கலந்துகொண்டு சேர்க்கை கிடைக்காத மாணவ மாணவியருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை (9.7.2024) நடைபெறுகிற கலந்தாய்வில் மாணவ மாணவியர் பங்கேற்க கூடிய மாணவர்கள் காலை 9 மணிக்குள் கல்லூரி வளாகத்தில் இருக்க வேண்டும்.

அதன்படி பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதவியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், பிசிஏ, வணிகவியல் பாடப்பிரிவுகள் பிகாம், பிபிஏ, மற்றும் பிஏ வரலாறு, பொருளியல் மற்றும் அரசியல் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர 400 மதிப்பெண்கள் முதல் 140 மதிப்பெண்கள் வரையில் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பங்கேற்கலாம். அதேபோல் 100-35 மதிப்பெண்கள் பெற்றவர்கள் பிஏ தமிழ் மற்றும் ஆங்கிலம் பாட பிரிவிற்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஏ, பிகாம், பிபிஏ, பாடப்பிரிவுகளுக்கு ₹2241ம் பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ₹2261ம், கணினி அறிவியல் மற்றும் பிசிஏ பாடப்பிரிவிற்கு ₹1361ம் கல்வி கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயப்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post இன்று மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு கல்லூரி முதல்வர் தகவல் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் appeared first on Dinakaran.

Tags : Anna Govt Arts College ,Seiyar ,Seyyar ,N. Kalaivani ,Arijar Anna Government Arts College ,Seiyaru Arijar Anna Govt. Arts College ,Seiyaru Arijar Anna Government Arts College ,Dinakaran ,
× RELATED மேல்மா சிப்காட் திட்டத்திற்கு...