×

மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வியுடன், தன்னம்பிக்கையும் அவசியம்

சுரண்டை,ஜூலை 9: மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வியுடன், தன்னம்பிக்கையும் மிகுந்த அவசியம் என்று சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி மாணவர்கள் அறிமுக விழாவில் பழனி நாடார் எம்எல்ஏ பேசினார். சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 2024-25ம் கல்வியாண்டின் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் அறிமுக விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெயா தலைமை வகித்தார். தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் கலந்து கொண்டு மாணவர்களை மத்தியில் பேசுகையில், ‘மாணவர்களின் வாழ்க்கையில் கல்லூரி பருவம் என்பது மிகவும் முக்கியமான காலகட்டம். இந்த காலகட்டத்தில் மாணவர்கள் ஒழுக்கமானவர்களாகவும் ஆசிரியர்களுக்கு கீழ்படிந்தவர்களாகவும் நடத்தல் மிக அவசியம். அவ்வாறு நடப்பவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்கள். குறிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெற கல்வியுடன், தன்னம்பிக்கையும் மிகுந்த அவசியம். முன்னாள் முதல்வர் காமராஜர் ஆரம்ப பள்ளி வரை மட்டுமே படித்திருந்தாலும் தனது மதிநுட்பத்தால் உலகமே வியக்கும் ஆட்சியை நடத்தினார். அவருடைய வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம் சுயநலம் இல்லா பொதுநலம் மட்டுமே. அவரது பெயரை தாங்கியுள்ள இந்த கல்லூரியில் படிக்கும் நீங்கள் தங்களது பெற்றோரின் சூழ்நிலைகளை அறிந்து நன்றாக படிக்க வேண்டும்’ என்றார்.

The post மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வியுடன், தன்னம்பிக்கையும் அவசியம் appeared first on Dinakaran.

Tags : Surandai ,Palani Nadar ,MLA ,Surandai Kamaraj Government College ,Surandai Kamaraj Government Arts College ,
× RELATED சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்த...