×

சேலம் சட்டக்கல்லூரி மாணவர் முதலிடம்

பள்ளிபாளையம், ஜூலை 9:பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலம் மகன் பரணிதரன், சேலம் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர், கடந்த ஜூன் 18ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் ஒன்றிய அரசு நடத்திய யோகா பயிற்சியாளர் தேர்வில் பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட பரணிதரன், தமிழகத்தில் முதல் மாணவராக தேர்வு பெற்று ‘ஏ’ கிரேடு சான்றிதழ் பெற்றார். யோகா பயிற்சியாளருக்கான இந்திய அரசின் அங்கீகாரத்துடன் திரும்பிய அவருக்கு நண்பர்கள், உறவினர்கள் வரவேற்பு அளித்து பாராட்டினர்.

The post சேலம் சட்டக்கல்லூரி மாணவர் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Salem Law College ,Pallipalayam ,Venkatajalam ,Paranidharan ,Avathipalayam ,Union Government ,Patiala district ,Punjab ,
× RELATED பள்ளிபாளையத்தில் சோதனை பான் மசாலா விற்ற கடைகளுக்கு அபராதம்