×

ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 

தேனி, ஜூலை 9: போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவதற்கான தீர்மானத்திற்கு ஆதரவாக ஐநாவில் வாக்களித்த பாஜ அரசைக் கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி(எம்.கே) மாவட்ட குழு சார்பில் தேனி நகர் பழைய பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி தாலுகா செயலாளர் வெள்ளைப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் வீரையா, வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

மாநில துணை செயலாளர் விசாகன், மாவட்ட செயலாளர் பெத்தாட்சிஆசாத் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, கஞ்சாவை போதைப்பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக ஐநாவில் ஆதரவாக வாக்களித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில், இளைஞர் அமைப்பின் மாநில பொறுப்பாளர் அபுதாகிர், மாவட்ட துணை செயலாளர் செல்லன், மாவட்ட துணை செயலாளர் போத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union BJP Government ,Theni ,BJP government ,UN ,United Communist Party of India ,MK) District Committee ,Theni Nagar Old Bus ,Dinakaran ,
× RELATED சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது: திருமாவளவன் கண்டனம்