×
Saravana Stores

கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

 

திருப்பூர், ஜூலை 9: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் நேற்று கொங்கு நகர் சரக உதவி கமிஷனர் அணில் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தபோது அவரிடம் கத்தி இருந்தது தெரியவந்துள்ளது.

உடனடியாக கத்தியை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரண மேற்கொண்டனர். விசாரணையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார் (30) என்பதும், திருப்பூரில் பாலமுருகன் நகர் பகுதியில் தங்கி பெயிண்டிங் பணிக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Kongu Main Road ,Kongu Nagar ,Assistant Commissioner ,Anil Kumar ,Dinakaran ,
× RELATED இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு...