×

நீலகிரியில் பணிபுரியும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு அன்று விடுமுறை வழங்க தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்

 

ஊட்டி, ஜூலை 9: நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு நாளை 10ம் தேதி இடைத்தேர்தல் தினத்தன்று கட்டாயம் விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) தாமரை மணாளன் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் நாளை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், உணவு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட விக்ரவாண்டி தொகுதியில் வாக்குரிமை பெற்ற தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இது சம்பந்தமாக மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

ஏதேனும் புகார் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதன்படி தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) தாமரை மணாளன்- 9952080800, தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஆனந்தன்-9965711725, தொழிலாளர் துணை ஆய்வாளர் பிரகாஷ்-9566121182, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உஷா நந்தினி-9003596882 ஆகிய எண்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post நீலகிரியில் பணிபுரியும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு அன்று விடுமுறை வழங்க தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Labor welfare department ,Vikravandi ,Nilgiris ,Ooty ,Nilgiri district ,Labor Assistant Commissioner ,Thamarai ,Constituency ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் 27ம் தேதி தொழிலாளர் நலத்துறை விழிப்புணர்வு கூட்டம்