×

பாலக்காடு ரயில் நிலையத்தில் 14.22 கிலோ கஞ்சா பறிமுதல்

 

பாலக்காடு செப்.28: பாலக்காடு ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா கடத்திய வட மாநில வாலிபர் 2 பேரை கைது செய்தனர். பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப்., கலால் துறை மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் ஒருங்கிணைந்து நேற்றுமுன்தினம் சோதனை நடத்தினர். அதில், 3வது பிளாட்பாரத்தில் சோதனை நடத்தியபோது, ரயிலுக்கு காத்திருப்பதுபோல் அங்கு அமர்ந்திருந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

மேலும், அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் 14.22 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்த ரஹிதுல் சேக் (29), மாணிக் சேக் (30) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் மேற்குவங்கத்தில் இருந்து கேரளாவுக்கு தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததாகவும், இவற்றை மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள சில்லரை விற்பனையாளர்களுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பாலக்காடு ரயில் நிலையத்தில் 14.22 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Palakkad railway station ,Palakkad ,RPF ,Excise Department ,Narcotics ,Palakkad Junction ,Dinakaran ,
× RELATED தீயணைப்பு துறையினர் ஒத்திகை