×

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

ஊட்டி, செப் 25: ஊட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்பான மென்பட்டு சேலைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஊட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி -2024 சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பங்கேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார். தீபாவளியை முன்னிட்டு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு விற்பனைக்காக ஊட்டியின் சிறப்பம்சமான தோடர் பழங்குடியின மக்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட எம்ராய்டரி சால்வைகள் மப்ளர்கள் மற்றும் ஸ்டோல், டேபிள் ரன்னர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ேஹாம் பர்னிசிங் ரகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. ஊட்டியில் உள்ள கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.55.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு தீபாவளிைய முன்னிட்டு ரூ.75 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி, முதுநிலை மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்) ஜெகநாதன், ஊட்டி விற்பனை நிலைய மேலாளர் சபீனா நாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Co-Optex Outlets ,Ooty ,District Collector ,Lakshmi Bhavya Nyayttu ,Diwali ,Ooty Co-Optex outlet ,Co-Optex ,Tamil Nadu ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்