×

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் கடந்த 2000ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயிடியினர் சமுதாயத்தை சேர்ந்த 106 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இலவச வீட்டுமனை பெற்று 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இதுவரை இலவச வீட்டு மனையில் பயனாளிகள் வீடுகள் கட்டிக் கொள்ளாமல் காலியாக வைத்துள்ளனர்.

இதனால், அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. அரசு நிலம் ஆக்கிரமித்து வீடு கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. இருப்பினும் 50க்கும் மேற்ப்பட்டோர் அவசர அவசரமாக அந்த இடத்தில் சிமென்ட் சீட் போட்டு வீடுகள் கட்டினர்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் போலீசார் பாதுகாப்புடன் அரசின் எச்சரிக்கையை மீறி கட்டிய 35 வீடுகளை பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர். இதை தொடர்ந்து, வீடுகள் இடிக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.கே.பேட்டை பஜாரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

The post ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Demolition Marxist-Communist Demonstration ,RK Pettai ,Adi Dravidar ,SVGpuram ,
× RELATED ஆர்.கே.பேட்டை அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் நோய் அபாயம்