×

குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு காப்பீடு திட்ட இழப்பீடு தொகை பெற்றுத்தரக்கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூலை 9: குறுவை சாகுபடியை இழந்துள்ள விவசாயிகளுக்கு காப்பீடு திட்ட இழப்பீட்டை பெற்றுத் தரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். காவிரி நீர் கிடைக்காமல் குறுவை சாகுபடியினை இழந்துள்ள விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும், காப்பீடு திட்ட வரன்முறையின் படி எதிர்பாரா இயற்கை இடர்பாட்டின் போது கிராம பரப்பளவில் 75 சதம் நிலங்கள் குறுவை சாகுபடி செய்திட வாய்ப்பு இல்லாத சூழலில் காப்பீடு திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால் கடந்தாண்டு சாகுபடி செய்த விவசாயிகள் வரும் 31ந் தேதிக்குள் காப்பீட்டிற்கான காப்புத் தொகை செலுத்திட உரிய வழிகாட்டுதலை உடனடியாக வழங்கி காப்பீடு திட்ட இழப்பீடு தொகையை பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், மேலும் பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட நெல், பருத்தி, எள், பயிறு வகைகளை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது செயலாளர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன் மற்றும் பொறுப்பாளர்கள் ரெங்கராஜன், ஜோசப், சௌந்திராஜன், முருகையன், ராவணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் (பொ) கேசவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு காப்பீடு திட்ட இழப்பீடு தொகை பெற்றுத்தரக்கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Tamil Nadu Farmers' Unions ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி