×

ஜம்மு- காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஜம்முகாஷ்மீர்: ஜம்மு- காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் பதுனோட்டா கிராமத்தை கடந்து ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். தீவிரவாதிகளை பிடிக்க கூடுதல் படைகள் கதுவா பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து துப்பாக்கிச் சண்டை நீடித்தது.

The post ஜம்மு- காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Kaduwa district ,Badunota ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் ராகுல் இன்று பிரசாரம்